காவல் நிலையம் முன்பு தீக்குளித்த பெண் - போலீஸார் மிரட்டிய ஆடியோ வெளியானதால் பரபரப்பு
திருவேற்காடு காவல் நிலையம் முன்பு பெட்ரோல் ஊற்றி தீவைத்து தற்கொலைக்கு முயன்ற பெண் உயிரிழந்தார். இதையடுத்து, காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு அருகே செந்தமிழ் நகரைச் சேர்ந்த கஜேந்திரன் மனைவி ரேணுகா. இவருக்கும், இவரது வீட்டின் அருகே வசித்துவரும் அமிர்தவள்ளி என்பவருக்கும் இடையே தகராறு இருந்துவந்தது. இதுதொடர்பாக அமிர்தவள்ளி, திருவேற்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து, நேற்று விசாரணைக்காக ரேணுகா, காவல் நிலையத்துக்கு சென்றார்.
பின்னர் திடீரென மறைத்து வைத்திருந்த பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. படுகாயமடைந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில், திருவேற்காடு போலீஸார் தன்னை பாலியல் வழக்கில் சிறையில் அடைத்து விடுவதாக மிரட்டியதால் தற்கொலை செய்து கொள்வதாக ரேணுகா தெரிவித்ததாக ஆடியோ வெளியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Next Story