தமிழகத்தில் இந்த ஆண்டு ஜூலை வரை 38,491 விபத்துக்கள் நடந்துள்ளன - தமிழக அரசு
இருசக்கர வாகனங்களில் செல்லும் போது ஹெல்மெட் மற்றும் கார்களில் செல்வோர் சீட்பெல்ட் அணிய வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.
தமிழகத்தில் சாலை விபத்துக்களை குறைக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு கடந்த மாதம் இறுதி வரை 38 ஆயிரத்து 491 விபத்துக்கள் நடந்துள்ளதாகவும், அதில் 15 ஆயிரத்து 601 இருசக்கர வாகன விபத்துக்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்துகளில் 7 ஆயிரத்து 526 பேர் இறந்துள்ளதாகவும், அதில் 2 ஆயிரத்து 476 பேர் இருசக்கர வாகன விபத்துகளில் இறந்தவர்கள் என்றும், இதில் ஹெல்மெட் அணியாமல் சென்றதால் ஆயிரத்து 811 இருசக்கர வாகன ஓட்டிகள் இறந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. வாகனங்களில் செல்வோர் உயிரை பாதுகாத்து கொள்ள சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடித்து இருசக்கர வாகனங்களில் செல்லும் போது ஹெல்மெட் மற்றும் கார்களில் செல்வோர் சீட்பெல்ட் அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மோட்டார் வாகன சட்டப்படி இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் தலைக்கவசம் அணிய வேண்டும் என தமிழக அரசு மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
Next Story