தினசரி 15 கிலோ மீட்டர் தூரம் ஓடும் 6 வயது சிறுவன் - விளையாட்டு துறை அங்கீகரிக்குமா?
மேட்டூரில் 6 வயது சிறுவன் ஓட்ட பந்தையத்தில் அதிக ஈடுபாடு கொண்ட சிறுவனுக்கு அவனது தந்தை ஆறு மாத காலமாக பயிற்சி அளித்து வந்துள்ளார்.
மேட்டூரில் 6 வயது சிறுவன் ஒருவன் தினசரி 15 கிலோ மீட்டர் தூரம் ஓடி பயிற்சி எடுத்து வருகிறான். தனியார் வங்கியின் உதவியாளரான கனிவளவன் மற்றும் பரமேஸ்வரியின் மகனான கவின், இரண்டாம் வகுப்பு படித்து வருகிறான். ஓட்டபந்தையத்தில் அதிக ஈடுபாடு கொண்ட இந்த சிறுவனுக்கு அவனது தந்தை ஆறு மாத காலமாக பயிற்சி அளித்து வந்துள்ளார். தற்போது சாதாரணமாக 10 முதல் 15 கிலோ மீட்டர் தூரம் ஓடி அசத்தி வரும் இந்த சிறுவனின் திறமையை, தமிழக விளையாட்டு துறை அங்கீகரிக்குமா ? என்று பெற்றோர் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
Next Story