"தமிழகத்தில் விரைவில் ஏர் ஆம்புலன்ஸ் சேவை" - அமைச்சர் விஜயபாஸ்கர்
விபத்தில் பாதிக்கப்படுபவர்களுக்கு குறித்த நேரத்தில் உயரிய சிகிச்சை அளிப்பது தொடர்பாக ஆஸ்திரேலியாவில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
விபத்தில் பாதிக்கப்படுபவர்களுக்கு குறித்த நேரத்தில் உயரிய சிகிச்சை அளிப்பது தொடர்பாக ஆஸ்திரேலியா விக்டோரியா மாகாண சுகாதாரத்துறையுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தந்திடிவிக்கு பேட்டியளித்த அவர், இந்த ஒப்பந்தம் மூலம் மருத்துவ தொழிற்நுட்பங்களை பகிந்துகொள்ளும் வகையி்ல் இங்குள்ள மருத்துவர்கள் ஆஸ்திரேலியா நாட்டுக்கும், அங்குள்ள மருத்துவர்கள் இந்தியாவுக்கும் வருவார்கள் என்று கூறினார். ஏர் ஆம்புலன்ஸ் வசதியும் தமிழகத்தில் கொண்டு வரப்படும் எனவும் தெரிவித்தார்.
Next Story