ஒருவர் மட்டுமே வசிக்கும் விநோத கிராமம்...

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒருவர் மட்டுமே வாழும் விசித்திர கிராமம் உள்ளது. தண்ணீர் பஞ்சத்தால் ஊரைக் காலி செய்த மக்களின் கண்ணீர் கதை.
ஒருவர் மட்டுமே வசிக்கும் விநோத கிராமம்...
x
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தாலுகா, கருங்குளம் யூனியனில் இருக்கிறது மீனாட்சிபுரம். கீழச் செக்காரக்குடி பஞ்சாயத்தில் உள்ள இக்கிராமமே ஆள் அரவமின்றி வெறிச்சோடியிருக்கிறது. தூத்துக்குடி - திருநெல்வேலி சாலையில் இருக்கும் பொட்டலூரணி கிராமத்தில் இருந்து வடக்கு நோக்கி சென்றால் 12 கிலோ மீட்டர் தொலைவில் வருகிறது மீனாட்சிபுரம். முள் புதராகிப் போன ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மழலைக் குழந்தைகள் துள்ளி விளையாடியதன் சாட்சியாய் மவுனித்து நிற்கிறது.

வீடுகள் சிதிலமடைந்து மனிதர்கள் வசித்ததற்கான தடயங்களை மட்டும் சுமந்துகொண்டு நிற்கின்றன. 5 ஆண்டுகளுக்கு முன்புவரை கூட மீனாட்சிபுரத்தில் சுமார் 150 குடும்பத்தினர் வசித்திருக்கின்றனர். போக்குவரத்து வசதி குறைவான கிராமம் என்பதால், ஏற்கெனவே சிரமத்திலிருந்த மக்களுக்கு, குடிநீர்  பஞ்சமும் ஏற்பட்டதால் வேறு வழியின்றி ஒருவர் பின் ஒருவராக காலி செய்துவிட்டு சென்றனர்.

பிள்ளைகள் பாடம் படித்த பள்ளி ஆடுகள் இளைப்பாறும் இடமாக மாறியிருக்கிறது. ஆட்கள் இல்லாததால் வீடுகள் இடிந்தும், சிதிலமடைந்தும் காணப்படுகிறது. பல வீடுகளில் மரங்கள் முளைத்து வளர்ந்து நிற்கின்றன. ஒரே ஒரு ஓட்டு வீட்டில் மட்டும் ஆள் இருப்பதற்கான அடையாளம் இருக்கிறது.

எல்லோருமே ஊரைக் காலிசெய்துவிட்டுச் சென்றுவிட்ட நிலையில் 70 வயது முதியவர் கந்தசாமி மட்டும் பிறந்து வளர்ந்த கிராமத்தை விட்டு செல்லமாட்டேன் என்று அங்கேயே தனிமையில் வசித்து வருகிறார்.


Next Story

மேலும் செய்திகள்