ஹெல்மெட் - யாருக்கெல்லாம் கட்டாயம்?

இருசக்கர வாகனத்தில் பின் இருக்கையில் அமர்ந்து செல்பவர்களுக்கும் ஹெல்மெட்
ஹெல்மெட் - யாருக்கெல்லாம் கட்டாயம்?
x
2015 ஆண்டில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த அதிரடி தீர்ப்புக்கு பின், தமிழ்நாட்டில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் கட்டாயம் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.மோட்டார் வாகனச்சட்டம் 1988ன் படி இந்த விதி அமலுக்கு வருவதாக தமிழக அரசின் அன்றைய செய்தி குறிப்பு தெரிவித்தது.மத்திய மோட்டார் வாகனச் சட்டத்தின் 129வது பிரிவின் படி, அனைத்து இருசக்கர வாகன ஓட்டிகளும், பின் இருக்கையில் பயணிப்பவர்களும், ISI முத்திரை பெற்ற ஹெல்மெட் அணிவது கட்டாயம். 
சீக்கியர்களுக்கு இதில் விலக்கு அளிக்கப் பட்டுள்ளது. . இது தவிர தேவைப்படும் விதிவிலக்குகளை அந்தந்த மாநில அரசு வழங்கலாம் என்றும் அதில் கூறப் பட்டுள்ளது. 2007ல் தமிழக அரசு கொண்டுவந்த விதிகளின் படி,தலைப்பாகை அணியும் 'மெய்வழிச்சாலை' பிரிவை சேர்ந்தவர்களுக்கு ஹெல்மெட் கட்டாயம் இல்லை இருசக்கர வாகன பின் இருக்கையில் பயணம் செய்யும் பெண்களுக்கு ஹெல்மெட் கட்டாயம் இல்லை ஆனால் வாகனம் ஓட்டும் பெண்களுக்கு ஹெல்மெட் கட்டாயம்.இருசக்கர வாகன பின் இருக்கையில் பயணம் செய்யும் 12 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஹெல்மெட்
கட்டாயம் இல்லை எனினும், தற்போது நாடாளுமன்றத்தில் நிலுவையில் உள்ள மோட்டார் வாகன திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டால் இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் 4 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு மட்டுமே ஹெல்மெட் விலக்கு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.  


தமிழகம் முழுவதும் இருசக்கர வாகன ஓட்டிகளிடம் ஹெல்மெட் கட்டாயம் குறித்து விழிப்புணர்வு


Next Story

மேலும் செய்திகள்