அண்ணா பல்கலை. துணைவேந்தர் சூரப்பா அதிரடி அறிவிப்பு...
அடிப்படை வசதியில்லாத பொறியியல் கல்லூரிகளை மூட அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுவிடம் பரிந்துரை செய்வோம் என, அண்ணா பல்கலை துணைவேந்தர் சூரப்பா தெரிவித்துள்ளார்.
நட்பாண்டில் 47 கல்லூரிகளில் ஒரு மாணவர் மட்டுமே சேர்ந்துள்ளனர். கல்லூரிகளில் அடிப்படை வசதிகள் இல்லாத்தது, ஆசிரியர்கள், ஆய்வக வசதி இல்லாதது போன்ற காரணங்களால் ஏராளமான கல்லூரிகளில் மாணவர்கள் சேரவில்லை.இது குறித்து, அண்ணா பல்கலைக் கழகத் துணைவேந்தர் சூரப்பாவிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, 'அடிப்படை வசதியில்லாத கல்லூரிகள் தொடர்பாக மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றார். அரசின் கல்வி உதவித்தொகையை காட்டி, மாணவர்களை ஏமாற்றி, அடிப்படை வசதியில்லாத கல்லூரிகளில் சேர முயற்சித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சூரப்பா தெரிவித்தார்.
Next Story