முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை ஆகஸ்ட் 31 வரை 139.9 அடியாக பராமரிக்க வேண்டும் - உச்சநீதிமன்றம்

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை ஆகஸ்ட் 31 வரை 139.9 அடியாக பராமரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை ஆகஸ்ட் 31 வரை 139.9  அடியாக பராமரிக்க வேண்டும் - உச்சநீதிமன்றம்
x
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை குறைக்கக்கோரி கேரளாவைச் சேர்ந்த ரசூல் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் நீர்மட்டத்தை குறைப்பது தொடர்பாக அணையின் துணை குழு, ஆலோசித்து முடிவெடுக்குமாறு உத்தரவிட்டிருந்தது. அதன்படி நேற்று மத்திய நீர்வளத் துறை செயலாளர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 139 அடியாக வைக்க வேண்டும் என கேரள அரசின் கோரிக்கையை ஏற்று அதை அப்படியே தொடரலாம் என முடிவெடுக்கப்பட்டது. இதனையடுத்து இந்த முடிவை அறிக்கையாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கறிஞர் இன்று தாக்கல் செய்தார். அதனை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம்,  ஆகஸ்ட் 31ம் தேதிவரை முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டத்தை 139.9  அடியாக பராமரிக்க வேண்டும் என்றும், நீர்மட்டம் அதிகரிக்கப்படாமல் இருப்பதை அணை துணைக்குழு கண்காணிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.



Next Story

மேலும் செய்திகள்