அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து - 20 பேர் காயம்
நெல்லை மாவட்டம் உக்கிரன்கோட்டையில் சாலையில் இருந்த குழியில் சிக்கி அரசு பேருந்து கவிழ்ந்தது.
நெல்லை மாவட்டம் உக்கிரன்கோட்டையில் சாலையில் இருந்த குழியில் சிக்கி அரசு பேருந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் காயமடைந்த 20 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சாலையை முறையாக பராமரிக்காததே இந்த விபத்துக்கு காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story