சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில், 5ம் வகுப்பு வரை மூன்று பாடங்களுக்கு மேல் பயிற்றுவித்தால் புத்தகங்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
x
சிபிஎஸ்இ பள்ளிகளின் பாடச்சுமையை குறைக்கக்கோரி வழக்கறிஞர் புருஷோத்தமன் தொடர்ந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது 5ஆம் வகுப்பு வரை மூன்று பாடங்களுக்கு மேல் நடத்தக்கூடாது என்ற அறிவிப்பை அமல்படுத்த வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. 2ஆம் வகுப்பு வரை மொழிப்பாடம் மற்றும் கணிதம், 3ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை சுற்றுச்சூழல் அறிவியல் பாடமும் சேர்த்து மூன்று பாடங்கள் மட்டும் பயிற்றுவிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதற்கு மேல் பயிற்றுவிக்கப்பட்டால் புத்தகங்களை பறிமுதல் செய்ய வேண்டும் என எச்சரிக்கை விடுத்த நீதிபதி கிருபாகரன், வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 27ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Next Story

மேலும் செய்திகள்