தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்தமட்டில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவு நேரங்களில் இடி மேகங்கள் உருவாகி லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் கூறியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சின்னகல்லாரில் 4 சென்டி மீட்டர் மழையும் வால்பாறையில் 3 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Next Story