மறுசுழற்சிக்கு பிளாஸ்டிக் பொருட்கள் கொடுத்தால் கூப்பன்...

தூத்துக்குடியின் கடற்கரை பூங்காவில் மாவட்ட நிர்வாக சார்பில் அமைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களை மறு சுழற்சி செய்யும் இயந்திரம்.
மறுசுழற்சிக்கு பிளாஸ்டிக் பொருட்கள் கொடுத்தால் கூப்பன்...
x
தூத்துக்குடியின் கடற்கரை பூங்காவில் மாவட்ட நிர்வாக சார்பில் பிளாஸ்டிக் பொருட்களை மறு சுழற்சி செய்யும் இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கபட்டு வரும் நிலையில், இந்த "ரிவர்ஷ் வெண்டிங் மெஷின்"  ஸ்பிக் நிறுவன உதவியுடன் அமைக்கப்பட்டுள்ளது. இதில் போடப்படும் பிளாஸ்டிக் பாட்டில்கள் அரைக்கப்பட்டு, கூப்பனாக வெளிவரும். இந்த கூப்பனை கொண்டு ஹைப்பர் மார்க்கெட் மற்றும் பல்வேறு உணவகங்களில் பத்து சதவீதம் தள்ளுபடியை பொதுமக்கள் பெற்று கொள்ளலாம். மாவட்டத்தின் பிற இடங்களிலும் மறு சுழற்சி இயந்திரம் அமைக்கபட உள்ளன.


Next Story

மேலும் செய்திகள்