உபயோகமற்ற பொருட்களை கொண்டு உருவான கலைப்பூங்கா...

உபயோகமற்ற பொருட்களில் இருந்து உருவாக்கப்பட்டுள்ள கலைப்பொருட்கள் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
உபயோகமற்ற பொருட்களை கொண்டு உருவான கலைப்பூங்கா...
x
சுற்றுச்சூழல் மாசுபாட்டை தடுக்கவும், சுற்றுப்புறங்களை அழகு படுத்தவும் சென்னை ஆவடி ஐசிஎப் நிர்வாகம் இந்த முயற்சியை எடுத்துள்ளது. அதன்படி ரயில் பெட்டித் தொழிற்சாலையின் கழிவுகள் மற்றும் உபயோகமற்ற உதிரி பாகங்களைக் கொண்டு 11 சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டன. இதனை 11 கலை வல்லுநர்கள் உருவாக்கினர். இந்த சிற்பங்களை கொண்டு ஒரு கலைப்பூங்காவும் அமைக்கப்பட்டு மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. சிற்பங்கள் அடங்கிய இந்த பூங்கா அழகு சேர்ப்பதுடன், சுகாதாரமான சூழலை உருவாக்கவும் உதவி செய்கிறது. 

Next Story

மேலும் செய்திகள்