தருமபுரி இளவரசன் மரண வழக்கு : 5 ஆண்டுகளுக்கு பிறகு விசாரணை அறிக்கை தாக்கல்
தருமபுரி இளவரசன் மர்ம மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையை,ஓய்வு பெற்ற நீதிபதி சிங்காரவேலு,முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிடம் இன்று தாக்கல் செய்தார்.
2013-ம் ஆண்டு,ஜூலை 4-ம் தேதி தருமபுரியை சேர்ந்த திவ்யாவை கலப்பு திருமணம் செய்த இளவரசன் மர்மமான முறையில் ரயில் தண்டவாளத்தில் சடலமாக கிடந்தார்.மரணத்தில் சந்தேகங்கள் இருப்பதாக அவரது தந்தை தெரிவித்ததை தொடர்ந்து அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா,ஓய்வு பெற்ற நீதிபதி சிங்காரவேலு தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை அமைத்தார்.இரண்டு மாதங்களுக்குள் விசாரணையை முடித்து அறிக்கை சமர்பிக்க அரசாணை வெளியிடப்பட்டது.இந்த காலக்கெடு,61 மாதங்கள் 24 நாட்கள் வரை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது.5 ஆண்டுகளாக பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தி வந்த ஓய்வு பெற்ற நீதிபதி சிங்காரவேலு,முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிடம் இன்று விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தார்.
Next Story