தரிசான 5 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் - ஆக்கிரமிப்பை அகற்ற விவசாயிகள் கோரிக்கை

உளுந்தூர்பேட்டை அருகே தனி நபர் ஆக்கிரமிப்பால், பெரிய ஏரிக்கு நீர்வருவது தடைபட்டு 5 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் தரிசாக கிடப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தரிசான 5 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் - ஆக்கிரமிப்பை அகற்ற விவசாயிகள் கோரிக்கை
x
* உளுந்தூர்பேட்டை அருகே தனி நபர் ஆக்கிரமிப்பால், பெரிய ஏரிக்கு நீர்வருவது தடைபட்டு 5 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் தரிசாக கிடப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.  

* அங்குள்ள கிள்ளனூர் பெரிய ஏரிக்கு நீர்வரும் பாதையை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதன் காரணமாக சுமார் 300 ஏக்கர் பரப்பளவிலான பெரிய ஏரிக்கு தண்ணீர் வருவது தடைபட்டுள்ளது. இதனால், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விட்டதாக வேதனை தெரிவிக்கும் விவசாயிகள், 600 அடி ஆழம் கிணறு அமைத்தாலும் நீர் கிடைப்பதில்லை என்கின்றனர்.  

* அந்த ஆக்கிரமிப்பை அகற்றி, தூர்ந்து போன நீர்வழிப்பாதையை சீரமைத்து, பெரிய ஏரிக்கு தண்ணீர் வர பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும் என கிள்ளனூர் விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்