ஈரோடு பகுதியில் வெள்ள நீரில் இறங்கி முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு

காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் பழனிசாமி நேரடியாக ஆய்வு செய்தார்.
ஈரோடு பகுதியில் வெள்ள நீரில் இறங்கி முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு
x
காவிரி ஆற்றில் வெள்ளம் பாய்ந்தோடுவதால், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் கரையோரங்களில் வசிக்கும் மக்கள்  பாதிக்கப்பட்டுள்ளனர்.  இந்நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் பழனிசாமி இன்று நேரடியாக சென்று ஆய்வு செய்தார். ஈரோடு மாவட்டம் பவானிக்கு சென்ற அவர், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். இதனைத் தொடர்ந்து, காலிங்கராயன், கொமாரபாளையம் பகுதிகளில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த முதலமைச்சர், மக்களிடம் நேரடியாக குறைகளை கேட்டறிந்தார். 


"கரையோரம் வசிப்பவர்களுக்கு அடுக்குமாடி வீடு" - முதலமைச்சர் 

பவானி மற்றும் காவிரி கரையோரம் வசிக்கும் மக்களுக்கு பாதுகாப்பான இடங்களில் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும், மேலும், பருவமழை தண்ணீரை சேமிக்க, முதல்கட்டமாக 292 கோடி ரூபாய் செலவில், 62 தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்