அரசை எதிர்பார்க்காமல் தங்கள் பகுதிக்கு சிசிடிவி கேமரா தானியங்கி கதவு அமைத்த மக்கள்

சென்னை புறநகர் பகுதியான பெரும்பாக்கம் குடிசை மாற்று குடியிருப்பில் பொதுமக்கள் தாமாக முன்வந்து, கண்காணிப்பு கேமராக்கள், தானியங்கி கதவுகள் அமைத்து குடியிருப்பை பாதுகாத்து வருகின்றனர்.
அரசை எதிர்பார்க்காமல் தங்கள் பகுதிக்கு சிசிடிவி கேமரா தானியங்கி கதவு அமைத்த மக்கள்
x
* புறநகர் பகுதி என்பதால், பெரும்பாக்கம் குடியிருப்பு பகுதிகளில் அவ்வப்போது கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு முற்றுபுள்ளி வைக்க நினைத்த பொதுமக்கள், தாமாக முன்வந்து பாதுகாப்பை பலப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.   

* இதற்காக,  குடியிருப்பு வாசிகளிடம் 50 ரூபாய் பெற்று, குடியிருப்பு முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் தானியங்கி கதவுகள் பொறுத்தப்பட்டுள்ளன. மின்னணு அட்டையை காண்பித்தால் மட்டுமே திறக்கும் விதமாக தானியங்கி கதவுகள் வடிவமைக்கப்படுள்ளன. இதனால்  வெளியாட்கள் உள்ளே நுழைவது முற்றிலும் தடுக்கப்படுவதாக, அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மொத்தம் உள்ள 32 பிளாக்குகளில், முதற்கட்டமாக 2 பிளாக்குள் இந்த நவீன வசதிகளை பெற்றுள்ளன. 

* இதேபோல, முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு வசதிகள் செய்துகொடுக்க அரசு முன்வந்தால், கொள்ளைச்சம்பவங்களை தடுக்க முடியும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்