அமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, அதன் நீர்மட்டம் 88 அடியை எட்டியது.
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, அதன் நீர்மட்டம் 88 அடியை எட்டியது. பாதுகாப்பு கருதி, அணைக்கு வரும் 35 ஆயிரம் கனஅடி நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. இதனால் அமராவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெள்ளம் தொடர்பான உதவிக்கு, 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Next Story