கர்நாடகாவில் வெளுத்து வாங்கும் கனமழை

தென் மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததால், கர்நாடகாவில் கனமழைவெளுத்து வாங்குகிறது. இதனால், அம்மாநிலத்தின் அணைகள் நிரம்பி,காவிரியில் இருந்து தமிழகத்திற்கு விநாடிக்கு, ஒரு லட்சத்து 70 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுகிறது.
கர்நாடகாவில் வெளுத்து வாங்கும் கனமழை
x
தென் மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததால், கர்நாடகாவில் கனமழை வெளுத்து வாங்குகிறது. இதனால், அம்மாநிலத்தின் அணைகள் நிரம்பி, காவிரியில் இருந்து தமிழகத்திற்கு விநாடிக்கு, ஒரு லட்சத்து 70 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுகிறது. இதனால், ஓகேனக்கல்லுக்கு தண்ணீர் வரத்து, படிப்படியாக அதிகரித்து வருகிறது. 

பவானி ஆற்றங்கரையோரங்களில் ஆட்சியர் ஆய்வு



ஈரோடு மாவட்டம் பவானி அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டிய நிலையில், அணையில் இருந்து 50 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் பவானி ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் பாதிக்கப்பட்ட மக்களை ஆட்சியர் பிரபாகர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்களையும் வழங்கினார். இதனைத் தொடர்ந்து அணையில் இருந்து நீர் வெளியேற்றப்படுவதை பார்வையிட்டார்.

பிலிகுண்டுலுவுக்கு 2 லட்சம் கன அடி நீர்வரத்து

 

கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் உபரி நீரின் அளவு அதிகரித்துள்ளதால், தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வரும் நீரின் அளவு, 2 லட்சம் கன அடியாக உயர்ந்துள்ளது. இதனால் ஒகேனக்கல் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு காரணமாக, அருவியில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீட்டிக்கப்படுள்ளது. காவிரி கரையோரத்தில் வசிக்கும் மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான பகுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

கல்லணையிலிருந்து நீர் திறப்பு அதிகரிப்பு- மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை



தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையில் இருந்து நீர் திறப்பு 30.358 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.இதனால் காவிரி கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்றும், மக்கள் யாரும் ஆற்றில் இறங்கி குளிக்கவோ, ஆற்றை கடக்கவோ வேண்டாம் எனவும் தஞ்சை மாவட்ட ஆட்சியர்  எச்சரிக்கை விடுத்துள்ளார். 

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியது




முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியதால் விவசாய சங்கத்தினர் பென்னி குயிக் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கேரளாவில் கன மழை காரணமாக அவதிப்படும் மக்களுக்கு அனுதாபம்  தெரிவித்தனர்.




Next Story

மேலும் செய்திகள்