பவானிசாகர் அணையில் இருந்து 40,000 கன அடி உபரி நீர் வெளியேற்றம்

பவானிசாகர் அணையில் இருந்து 11 ஆண்டுகளுக்கு பிறகு மேல் மதகுகள் வழியாக நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
பவானிசாகர் அணையில் இருந்து 40,000 கன அடி உபரி நீர் வெளியேற்றம்
x
பவானி சாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், பவானி சாகர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து 102 அடியை எட்டியுள்ளது. இதனால், அதிகப்படியான நீரை வெளியேற்றுவதற்கு  வருவாய் துறையினரும், நகராட்சி, பேரூராட்சிகளை சேர்ந்த நிர்வாகிகளும், ஒலி பெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், அணையின் பாதுகாப்பு கருதி, ஈரோடு மாவட்ட ஆட்சியர் பிரபாகர் நேற்றிரவு அணையை திறந்து வைத்தார். பவானி ஆற்றில், வினாடிக்கு 40 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 2007 ஆம் ஆண்டுக்கு பிறகு 11 ஆண்டுகளாக மேல் மதகுகள் வழியாக நீர் வெளியேற்றப்படாமல் இருந்த நிலையில், தற்போது தண்ணீர் வெளியேறுவதை சுற்றுவாட்டார மக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.

மேற்கு தொடர்ச்சி மலையில் தொடரும் கனமழை : நிரம்பி வழியும் கொடுமுடியாறு அணை



மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்துவரும் கனமழையால், நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி அருகே உள்ள கொடுமுடியாறு அணை நிரம்பி வழிகிறது. அணையின் முழு கொள்ளளவான 52 புள்ளி 50 அடியை எட்டியதால், நம்பியாற்றில், 2ஆயிரம்  கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. 

வள்ளியூரில் தொடர் மழை - அருவியில் வெள்ளப்பெருக்கு 



வள்ளியூர் அருகே பணகுடி குத்திரபாஞ்சான் அருவியில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் அனுமன் ஆற்றிலும் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

Next Story

மேலும் செய்திகள்