மருத்துவ படிப்புக்கு கருணை மதிப்பெண்கள் வழங்குவது அபத்தம் - சென்னை உயர் நீதிமன்றம்

புதுச்சேரி மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனத்தில் மருத்துவம் படிக்கும் 19 மாணவர்கள் தங்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கி, படிப்பை முடிக்க அனுமதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
மருத்துவ படிப்புக்கு கருணை மதிப்பெண்கள் வழங்குவது அபத்தம் - சென்னை உயர் நீதிமன்றம்
x
புதுச்சேரி மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனத்தில் மருத்துவம் படிக்கும் 19 மாணவர்கள் தங்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கி, படிப்பை முடிக்க அனுமதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இதனை  விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், கருணை மதிப்பெண்களை உரிமையாக கோர முடியாது என்றும், அதுகுறித்து பல்கலைக்கழகம் முடிவு செய்ய மருத்துவ கவுன்சிலுக்கு அதிகாரம் வழங்கியிருப்பதாகவும் கூறி, வழக்கை முடித்து வைத்தார். 

மருத்துவ படிப்பில் கருணை மதிப்பெண்கள் வழங்குவது அபத்தமானது என கருத்து தெரிவித்த நீதிபதி, கருணை மதிப்பெண்கள் வழங்குவதை ரத்து செய்து  விதிகளில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். 

கருணை மதிப்பெண்கள் பெற்று மருத்துவர்களானவர்களிடம் சிகிச்சை பெற்று உயிரை பணயம் வைக்க யாரும் விரும்ப மாட்டார்கள் என்று கூறிய நீதிபதி, நாட்டு மக்களின் நலனுக்கு எதிராக, மருத்துவ மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்க நீதிமன்றங்கள் உத்தரவிடுவது அநீதியானது என்றும் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்