சிறுவாச்சூர் பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றும் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன்
அசுரனை வதம் செய்ய மதுரையில் இருந்து கிளம்பி வந்து சிறுவாச்சூரில் காளியாக மாறி மக்களை காக்கும் அம்மன் குறித்து செய்தித் தொகுப்பு
* சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூருக்கு அருகில் 6 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது சிறுவாச்சூர். இங்கு சாந்த சொரூபத்தில் காளியாக காட்சி தருகிறாள் மதுரக்காளியம்மன்.
* இந்த பகுதியில் இருந்த செல்லியம்மனிடம் வரம் வேண்டிய மந்திரவாதி, அதைக் கொண்டு அம்பாளையே அடிமைப்படுத்தி வந்துள்ளார்... இதனால் மதுரையில் உள்ள காளியம்மனை உதவிக்கு அழைத்துள்ளார் செல்லியம்மன். மதுரையில் இருந்து கிளம்பி சிறுவாச்சூர் வந்த காளி, அரக்கனை வதம் செய்து இங்கேயே மதுரகாளியாக குடிகொண்டதாக வரலாறு கூறுகிறது. அதேநேரம் மதுரையை எரித்த கண்ணகியே இங்கு காளியாக தங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
* ஆதி தெய்வமான செல்லியம்மன், மதுரகாளியம்மனுக்கு தன் இடத்தை கொடுத்து விட்டு அந்த பகுதியில் உள்ள பெரியசாமி மலைக்கு சென்று தங்கியிருக்கிறாள்..இன்றும் தீபாராதனை உட்பட அனைத்து மரியாதைகளும் செல்லியம்மனுக்கு காட்டிய பிறகே மதுரகாளிக்கு செய்யப்படுகிறது..
* வெள்ளிக்கிழமையன்று கோயிலுக்கு வந்த காளி திங்கட்கிழமை பக்தர்களுக்கு காட்சி தந்ததால் இன்றும் திங்கள் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் மட்டுமே கோயில் திறக்கப்படுகிறது...
* வேண்டுதலுடன் இங்கு வரும் பக்தர்கள் தங்கள் கைகளாலேயே அரிசியை இடித்து மாவிளக்கு செய்து அம்மனுக்கு படைப்பது இங்கு பிரசித்தம்... பில்லி, சூனியம் போன்றவற்றை நீக்கி பக்தர்களுக்கு நல்வாழ்வை கொடுக்கிறாள்
* திங்கள், வெள்ளிக் கிழமைகள் மற்றும் அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் கோயிலில் விசேஷ நிகழ்வுகளும், அம்பாளுக்கு அலங்காரமும் களைகட்டும். இங்கு வந்து மதுரகாளியை தரிசிப்போர் செல்லியம்மனையும் வணங்கிய பிறகே செல்கின்றனர்.
* திருமணத் தடையை நீக்குவதோடு, குழந்தை பேறையும் வழங்கி பக்தர்களை பாதுகாத்து நிற்கிறாள் இந்த காளி.. இந்த கோயிலுக்கு வந்து செல்வதற்கான போதுமான பேருந்து வசதிகளும் உண்டு.
Next Story