திருத்தணி கோவிலில் ரூ.1.73 கோடி ரூபாய் காணிக்கை - கோவில் நிர்வாகம்
திருத்தணி முருகன் கோயிலில் பக்தர்களிடம் இருந்து 1 கோடியே 73 லட்சம் ரூபாய் ரொக்கப்பணம், 371 கிராம் தங்கம், 15 ஆயிரத்து 664 கிராம் வெள்ளி பொருட்கள் காணிக்கையாக பெறப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆடிக்கிருத்திகை மற்றும் மூன்று நாட்கள் நடைபெற்ற தெப்ப திருவிழா நிறைவடைந்த நிலையில், திருத்தணி முருகன் கோயிலில் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. கோவில் தக்கார் ஜெய்சங்கர் தலைமையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. இதில் 1 கோடியே 73 லட்சம் ரூபாய் ரொக்கப்பணம், 371 கிராம் தங்கம், 15 ஆயிரத்து 664 கிராம் வெள்ளி பொருட்கள் பக்தர்களிடம் இருந்து காணிக்கையாக பெறப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Next Story