தமிழக கோயில் நில ஆக்கிரமிப்பு- அறநிலையத்துறை அறிக்கை தாக்கல்

தமிழக கோயில் நில ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்கில், உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், இந்து சமய அறநிலையத்துறை இந்த அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.
தமிழக கோயில் நில ஆக்கிரமிப்பு- அறநிலையத்துறை அறிக்கை தாக்கல்
x
தமிழக கோயில் நில ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்கில், உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், இந்து சமய அறநிலையத்துறை இந்த அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அதில், மாநிலம் முழுவதும் உள்ள 39 ஆயிரத்து 508  கோயில்களுக்கு சொந்தமான நிலங்களை அடையாளம் காண்பதற்கும் அவற்றை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்பதற்கு தனி குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளது.மேலும் ஒன்பதாயிரத்து 14 கோயில்களுக்கு சொந்தமான இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 

3 ஆயிரத்து 807 கோயில்களுக்கு சொந்தமான நிலங்களில் உள்ள 28 ஆயிரத்து 617 வாடகைதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும், ஆறாயிரத்து 900 வாடகைதாரர்களிடம் இருந்து 14 கோடியே 80 லட்சம் ரூபாய் வாடகை பாக்கி வசூலிக்கப்பட்டு உள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கோவில்களுக்கு சொந்தமாக 4 லட்சத்து 78 ஆயிரம் ஏக்கர் நிலங்களும், 22 ஆயிரத்து 600 கட்டிடங்களும் 33 ஆயிரத்து 565 காலியிடங்களும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுவரை 6 ஆயிரத்து 202 கோயில்களுக்கு சொந்தமான சொத்துக்கள் குறித்த ஆவணங்களை ஆய்வு செய்ததில், 14 ஆயிரத்து 21 பேர் நிலத்தை ஆக்கிரமித்துள்ளது தெரிய வந்திருப்பதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அறநிலையத் துறையின் அறிக்கை குறித்து திருப்தி தெரிவித்த நீதிபதி, ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி கோயில் நிலங்களை மீட்பதற்கு கூடுதலாக 6 வாரம் அவகாசம் வழங்கி உத்தரவிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்