மக்கும் குப்பையில் இருந்து 200 கிலோ உரம் தயாரிப்பு - விவசாயிகளுக்கு ரூ.10-க்கு உரம் விற்கப்படுகிறது

புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட 42 வார்டுகளில் சேகரிக்கப்படும் 5 டன் குப்பைகள் உர உற்பத்தி மையத்திற்கும் அனுப்பப்படுகிறது.
மக்கும் குப்பையில் இருந்து 200 கிலோ உரம் தயாரிப்பு - விவசாயிகளுக்கு ரூ.10-க்கு உரம் விற்கப்படுகிறது
x
புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட 42 வார்டுகளில் சேகரிக்கப்படும் 5 டன் குப்பைகளில், 3 டன் குப்பைகள் சந்தையம்போட்டை மைக்ரோ கம்போஸ்ட் ​உர உற்பத்தி மையத்திற்கும், 2 டன் குப்பைகள் காந்தி பூங்கா  உர உற்பத்தி  மையத்திற்கும் அனுப்பப்படுகிறது. அவற்றில் இருந்து 30 நாட்களுக்கு ஒருமுறை 300 கிலோ இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது. முதல் கட்டமாக சந்தையம்பேட்டை உர உற்பத்தி மையத்தில் தற்போது 200 கிலோ உரம் தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த உரம் விவசாயிகளுக்கு கிலோ பத்து ரூபாய்க்கு வழங்கப்பட்டு வருவதாக நகராட்சி சுகாதார ஆய்வாளர் பரக்கத்துல்லா  தெரிவித்தார்.



Next Story

மேலும் செய்திகள்