அ.தி.மு.க, தி.மு.க. பெற்ற நன்கொடை

அ.தி.மு.க. மற்றும் தி.மு.க கட்சிகளின் கடந்த ஆண்டு வருமானம் பற்றிய தகவல்கள்.
அ.தி.மு.க, தி.மு.க. பெற்ற நன்கொடை
x
ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் என்ற அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநில கட்சிகளின் 2016 - 2017 நிதி ஆண்டில் வருமானம் பற்றி  தெரிவிக்கப் பட்டுள்ளது.அதன்படி, அதிமுக வுக்கு 48 கோடியே 88 லட்ச ரூபாய் கிடைத்ததாகவும் அந்த  பணம் முழுவதும் முகம் தெரியாத நபர்களிடம் இருந்து பெறப்பட்டதாகவும் அதே காலகட்டத்தில் திமுக வுக்கு 3 கோடியே 78 லட்ச ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாகவும், அதில், 75 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் தெரிந்தவர்களிடம் இருந்து பெறப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.இதுபோல, பா.ம.க வுக்கு 3 கோடியே 58 லட்ச ரூபாய் கிடைத்துள்ளது. அதில் ஒரு லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் தெரிந்தவர்களிடம் இருந்து பெற்றதாக கூறப்பட்டுள்ளது.  


சட்டப்படி, 20,000 ரூபாய்க்கு குறைவாக நன்கொடை அளிப்பவர்களின் விவரங்களை கட்சிகள் அளிக்க தேவையில்லை.இந்நிலையில், 2016 - 17 நிதி ஆண்டில், மாநில கட்சிகளின் மொத்த வருமானம் 347 கோடி ரூபாய் எனவும் அதில், 77 கோடி ரூபாய் முகம் தெரியாத நபர்களிடம் இருந்தும், 91 கோடி ரூபாய் தெரிந்தவர்களிடம் இருந்தும் பெறப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.சொத்துகள், வைப்பு நிதி வட்டி, சந்தா போன்ற வகைகளில் 179 கோடி ரூபாய் கிடைத்துள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்