மெரினா நினைவிட வழக்கு : நீதிமன்றத்தில் காரசார விவாதம்

திமுக தலைவர் கருணாநிதி உடலை மெரினாவில் நல்லடக்கம் செய்ய கோரும் வழக்கின் விசாரணை மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது
மெரினா நினைவிட வழக்கு : நீதிமன்றத்தில் காரசார விவாதம்
x
திமுக தலைவர் கருணாநிதி உடலை மெரினாவில் நல்லடக்கம் செய்ய கோரும் வழக்கின் விசாரணை மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது.  காலை 8.30க்கு மீண்டும் தொடங்கிய வழக்கு விசாரணையில் இரு தரப்பிலும் கடுமையான வாதங்கள் முன்வைக்கப்பட்டன .

தமிழக அரசு தரப்பு வாதம் :

* அரசியல் காரணங்களுக்காக, ஜெயலலிதா நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்குகளை வாபஸ் பெறச் செய்தது துரதிருஷ்டவசமானது - அரசு தரப்பு

* திராவிட இயக்கத்தின் முன்னோடியான பெரியார் மெரினாவில் அடக்கம் செய்யப்படவில்லை - அரசு தரப்பு வாதம்

* முன்னாள் முதல்வரான காமராஜருக்கும் மெரினாவில் அனுமதி மறுக்கப்பட்டது - தமிழக அரசு

முன்னாள் முதல்வருக்கு மெரினாவில் இடம் ஒதுக்க விதிகளில் இடமில்லை எனக் கூறி கருணாநிதி ஆட்சியில் இருந்தபோது ஜானகிக்கு இடம் ஒதுக்க மறுக்கப்பட்டது - அரசு பதில் மனுவில் தகவல்

* அரசின் உத்தரவை அல்லாமல் பத்திரிகை செய்தி குறிப்பை எதிர்த்து வழக்கு தொடர முடியாது - தமிழக அரசு 

* கடலோர ஒழுங்குமுறை ஆணையத்தை வழக்கில் இணைக்கவில்லை - தமிழக அரசு

* உணர்வுகளின் அடிப்படையில் வழக்கு தொடர முடியாது - தமிழக அரசு

* கருணாநிதிக்கு அனைத்து கவுரவமும் வழங்கப்படுகிறது, இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல - அரசுத் தரப்பு

* மெரினாவில் நினைவிடங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த வழக்குகள் வாபஸ் பெறப்பட்டதால் தள்ளுபடி செய்யப்பட்டது, இது அரசின் முடிவை செல்லாததாக ஆகாது - அரசுத் தரப்பு


திமுக தரப்பு வாதம் : 

காமராஜர், ராஜாஜி ஆகியோர் கொள்கைக்கும், திராவிட இயக்க தலைவர்கள் கொள்கைகளுக்கும் வித்தியாசம் உள்ளது - திமுக வாதம்

* இடம் ஒதுக்கும் விவகாரத்தில் அரசு பாரபட்சமாக முடிவு எடுத்துள்ளது - திமுக தரப்பு வாதம்

* எம்.ஜி.ஆர் இறந்தபோது அண்ணா சமாதி அருகில் இடம் ஒதுக்கப்பட்டது, அதேபோல தான் ஜெயலலிதாவும் அடக்கம் செய்யப்பட்டார் - திமுக தரப்பு வாதம்.

* 13 முறை எம்எல்ஏவாக இருந்த கருணாநிதிக்கு, மெரினாவில் இடம் ஒதுக்காவிட்டால் தொண்டர்கள் உணர்வுகளை புண்படுத்தும் - திமுக தரப்பு.

* 1988 அரசு உத்தரவுப்படி ஏற்கனவே மெரினாவை மயானமாகவும், நினைவிடமாகவும் அறிவித்துள்ளது சென்னை மாநகராட்சி - திமுக தரப்பு

* அந்த பகுதியில் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய கோருகிறோம்  - திமுக தரப்பு

* மத்திய அரசு விதிகளின்படி கருணாநிதிக்கு இடம் வழங்க எந்த தடையும் இல்லாதபோது அனுமதி மறுப்பதேன்? - திமுக தரப்பு கேள்வி

* ஜெயலலிதா உடலை அடக்கம் செய்யும்போது எந்த சட்ட சிக்கலும் இல்லை என அரசு கூறியது - திமுக தரப்பு

* தற்போது சட்ட சிக்கல் இருப்பதாக கூறும் அரசு, அவை என்ன என கூறவில்லை - திமுக தரப்பு

* திராவிட தலைவர்கள் மத்தியில் கருணாநிதிக்கு எதிராக பாரபட்சமாக செயல்படுகிறது அரசு - திமுக தரப்பு

* தொண்டர்களின் உணர்வுகள் பாதிக்கப்பட்டால், கண்ணியமான அடக்கமாக இருக்காது - திமுக தரப்பு

* காமராஜரை பின்பற்றுபவர்கள் மத்தியில் கருணாநிதி குறித்து தவறான எண்ணத்தை உருவாக்க பழிவாங்கும் நோக்கத்துடன் அரசு வழக்கறிஞர் வாதிடுகிறார் - திமுக தரப்பு

* மெரினாவில் கருணாநிதி உடலை புதைக்க சட்டரீதியாக என்ன தடை உள்ளது என்பதற்கு அரசு எந்த பதிலும் அளிக்கவில்லை - திமுக தரப்பு

தமிழக அரசுக்கு நீதிபதிகள் கேள்வி

* மெரினாவில் நினைவிடம் கட்ட எதிர்ப்பு தெரிவித்த வழக்குகள் வாபஸ் பெற்ற பின் சட்ட சிக்கல் என்ன உள்ளது? - தமிழக அரசுக்கு நீதிபதிகள் கேள்வி

* முந்தைய கால நிகழ்வுகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது - தமிழக அரசு பதில்

* மெரினாவில் நினைவிடங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த வழக்குகள் வாபஸ் பெறப்பட்டதால் தள்ளுபடி செய்யப்பட்டது, இது அரசின் முடிவை செல்லாததாக ஆகாது - அரசுத் தரப்பு

* பத்திரிகை செய்திக்குறிப்பில் மத்திய அரசின் விதிகளை ஏன் குறிப்பிடவில்லை? - தமிழக அரசுக்கு நீதிபதிகள் கேள்வி.

* பத்திரிகை செய்திகுறிப்பை எதிர்த்து வழக்கு தொடர முடியாது, அரசு தற்போது அனைத்து விவரங்களையும் குறிப்பிட்டு விரிவான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது - அரசு தரப்பில் பதில்

"காங். தலைவர்களை அவமதிப்பதா?"

கண்ணியமான அடக்கத்துக்காக காந்தி மண்டபத்தில் 2 ஏக்கர் நிலம் ஒதுக்கப்படுகிறது. காங். தலைவர்கள் சமாதிகள் உள்ள அந்த பகுதியில் அடக்கம் செய்வது கண்ணியமற்றது என்பது அந்த தலைவர்களை அவமதிப்பதற்கு சமம் - அரசுத் தரப்பு

அடக்கம் செய்ய நிலம் ஒதுக்கும்படி கோர யாருக்கும் எந்த உரிமையும் இல்லை -அரசு

Next Story

மேலும் செய்திகள்