கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்ட விவசாயிகள் கோரிக்கை...
சீர்காழி அருகே பாயும் கொள்ளிடம் ஆற்றில், தடுப்பணை இல்லாததால்,சுமார் 25 முதல் 40 டிஎம்சி அளவிலான தண்ணீர் கடலில் வீணாக கலப்பதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
சீர்காழி அருகே பாயும் கொள்ளிடம் ஆற்றில், தடுப்பணை இல்லாததால், சுமார் 25 முதல் 40 டிஎம்சி அளவிலான தண்ணீர் கடலில் வீணாக கலப்பதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டி உள்ளனர். அமராவதி அணையில் இருந்து, பாதுகாப்பு கருதி, 25 ஆயிரம் கன அடி தண்ணீர், அண்மையில் திறந்து விடப்பட்டது. 2 நாட்கள் கழித்து, இந்த தண்ணீர் கொள்ளிடம் ஆற்றின் வழியே சீர்காழியை அடுத்த காட்டூரில் கடலில் கலந்து, வீணானது. தடுப்பணை கட்டாததால், வீணாக தண்ணீர் கடலில் கலப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
Next Story