ஆகஸ்ட் 15ல் மூலிகை பெட்ரோல் விற்பனைக்கு வரும் - ராமர் பிள்ளை

ஆகஸ்ட்15 ல் மூலிகை பெட்ரோல் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கிறார் ராமர் பிள்ளை.
ஆகஸ்ட் 15ல் மூலிகை பெட்ரோல் விற்பனைக்கு வரும் - ராமர் பிள்ளை
x
* 1990 களின் இறுதியில் மூலிகை பெட்ரோல் கண்டுபிடித்திருப்பதாகச் சொல்லி பரபரப்பை ஏற்படுத்தியவர், ராமர் பிள்ளை. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்தவர். 

* மூலிகை பெட்ரோல் விவகாரத்தில் புகழின் உச்சிக்கு சென்ற ராமர் பிள்ளை, தனது தயாரிப்பை ராமர் தமிழ் தேவி மூலிகை எரிபொருள் என்று பெயரிட்டு விற்பனையும் செய்தார்.

* இதனிடையே, மூலிகை பெட்ரோல் என்ற பெயரில் பெட்ரோலியப் பொருட்களான டொலுவின், நாப்தா போன்றவற்றை கலப்படம் செய்து விற்றதாக புகார் எழுந்தது.

* இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த சிபிஐ அதிகாரிகள், ராமர்பிள்ளையை கைது செய்தனர்.பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில், 2016 ஆம் ஆண்டு, ராமர் பிள்ளை உள்ளிட்ட 5 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது நீதிமன்றம். 

* இந்த நிலையில், தற்போது மீண்டும் மூலிகை எரிபொருளை விரைவில் விற்பனைக்கு கொண்டுவருவேன் என்று பரபரப்பைக் கிளப்புகிறார், ராமர்பிள்ளை.

* அரசியல் தலையீடு காரணமாகவே தன் மீது வழக்கு தொடரப்பட்டதாக, குற்றம்சாட்டுகிறார். 2015 ஆம் ஆண்டு, தனது கண்டுபிடிப்பை பிரதமர் மோடி பார்வையிட்டதாகவும் கூறுகிறார், ராமர்பிள்ளை. 

* 90 களின் இறுதியில் முறையான அனுமதியுடனே தன்னுடைய மூலிகை எரிபொருளை விற்பனை செய்ததாகக் கூறும் ராமர்பிள்ளை, அரசுக்கு வரி செலுத்தியதாகவும் குறிப்பிடுகிறார்.

* ஒருபக்கம், மூலிகை எரிபொருள் என்ற ஒற்றை வார்த்தையால் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த ராமர் பிள்ளை, மறுபக்கம் மோசடிப் பேர்வழி என்று நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டார். 

* ஆனாலும், தன்னுடைய கண்டுபிடிப்பு உண்மைதான் என்று இன்றும் வாதிடும் ராமர்பிள்ளை விரைவில் அதனை நிரூபிப்பேன் என்றும் சவால் விடுகிறார்.

* தற்போது மூலிகை எரிபொருளை தனியார் நிறுவனம் ஒன்றின் மூலம் விற்பனைக்கு கொண்டுவர இருப்பதாக ராமர்பிள்ளை குறிப்பிட்ட, அந்த நிறுவனத்தை, தொடர்புகொண்டு கேட்டபோது, ராமர் பிள்ளைக்கும் தங்களுக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை என்று சுருக்கமாக முடித்துக்கொண்டனர்.





Next Story

மேலும் செய்திகள்