விவசாய உபரி நிலங்களை ஏழைகளுக்கு வழங்க அரசு திட்டம்
பழனி அருகே உள்ள ஜமீன்களின் 4 ஆயிரத்து 824 ஏக்கர் விவசாய உபரி நிலங்களை, நிலம் இல்லாதவர்களுக்கு பிரித்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
பழனி அருகே உள்ள ஜமீன்களின் 4 ஆயிரத்து 824 ஏக்கர் விவசாய உபரி நிலங்களை, நிலம் இல்லாதவர்களுக்கு பிரித்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த பழனி சார் ஆட்சியர் அருண்ராஜ், பழனியை அடுத்துள்ள நெய்க்காரபட்டியில் பல்வேறு ஜமீன்களின் கட்டுப்பாட்டில் இருந்த 4 ஆயிரத்து 824 ஏக்கர் விவசாய நிலங்கள், தமிழக அரசால் உபரி நிலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தற்போது முதல்கட்டமாக ஆயிரத்து 860 ஏக்கர் நிலங்களை, நிலமற்ற ஏழை விவசாய தொழிலாளர்கள், தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த விவசாய கூலிகள், முன்னாள் ராணுவ வீரர்கள், பர்மா மற்றும் இலங்கை நாடுகளில் இருந்து தாயகம் திரும்பியவர்களுக்கு வழங்கப்பட உள்ளதாக கூறினார்.
நிலம் அமைந்துள்ள பகுதியில் இருந்து 5 கிலோ சுற்றளவில் உள்ளவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம் என்றும்,விண்ணப்பதாரர்களின் உண்மை நிலையை கண்டறிந்து தகுதியானவர்களுக்கு இந்த நிலங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பழனி சார் ஆட்சியர் குறிப்பிட்டார். ஏழை விவசாய தொழிலாளர்கள் நேரடியாக விண்ணப்பிக்க வேண்டும், இடைத்தரர்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தினார்
Next Story