விவசாயம் பொய்த்ததால் விசைத்தறிக்கு மாறிய இளைஞர்கள்

திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பேட்டை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் விவசாயம் கை கொடுக்காததால் இளைஞர்கள் சிலர் விசைத்தறியை முழுநேர தொழிலாக செய்யத் தொடங்கியுள்ளனர்.
விவசாயம் பொய்த்ததால் விசைத்தறிக்கு மாறிய இளைஞர்கள்
x
திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பேட்டை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் விவசாயம் கை கொடுக்காததால் பலர் வேலை தேடி வெளிமாநிலங்களுக்கு சென்றுள்ளனர். 

ஆனால், தங்கள் சொந்த ஊரை விட்டு பிரிய மனம் இல்லாமல் இங்கேயே தங்கி மாற்றுத்தொழில் செய்ய முடிவெடுத்த இளைஞர்கள் சிலர் விசைத்தறியை முழுநேர தொழிலாக செய்யத் தொடங்கியுள்ளனர். 

திருப்பூர், கோவை போன்ற பகுதிகளில் நெய்யப்படும் தறிகளை இங்கேயே உருவாக்கி இளைஞர்கள் விற்பனை செய்கின்றனர். இதனால் அவர்களுக்கு கணிசமான வருவாய் கிடைக்கிறது. 

வங்கிகள் கடனுதவி அளித்தால் விசைத்தறி தொழிலை மேம்படுத்த உதவியாக இருக்கும் என இந்த இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்