சுகப்பிரசவம் நிகழ எளிய வழிகாட்டும் நிகழ்ச்சி - ஹீலர் பாஸ்கரிடம் கோவை போலீசார் விசாரணை
சுகப்பிரசவம் நிகழ எளிய வழிகாட்டும் நிகழ்ச்சி வரும் 26 ஆம் தேதி கோவையில் நடைபெறும் என தனியார் அமைப்பு ஒன்று விளம்பரம் செய்திருந்தது.
சுகப்பிரசவம் நிகழ எளிய வழிகாட்டும் நிகழ்ச்சி வரும் 26 ஆம் தேதி கோவையில் நடைபெறும் என தனியார் அமைப்பு ஒன்று விளம்பரம் செய்திருந்தது. இதுதொடர்பாக கோவை மண்டல சுகாதாரத்துறை இணை இயக்குநர் அளித்த புகாரின் பேரில், குனியமுத்தூர் போலீசார், அந்த அமைப்பைச் சேர்ந்த ஹீலர் பாஸ்கரை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அண்மையில் திருப்பூரில் வீட்டிலேயே சுகப்பிரசவத்திற்கு முயன்று, இளம் பெண் கிருத்திகா உயிரிழந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
Next Story