பள்ளி கட்டடத்தை சூழ்ந்த வெள்ள நீர் - அடிக்கடி விடுமுறை விடுவதால் கல்வி பாதிப்பு
மயிலாடுதுறையில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால், குழந்தைகளின் கல்வி பாலாகியுள்ளதாக பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை , சித்தமல்லி என்ற கிராமத்தில், இயங்கிவரும் அரசு உயர்நிலைப்பள்ளி அருகே ராஜன்வாய்க்காலின் கிளை வாய்க்கால் செல்கிறது. பல ஆண்டுகளாக தூர்வாரப்படாத இந்த வாய்க்காலில், காவிரியில் இருந்து நீர் திறப்பு காரணமாக உடைப்பு ஏற்பட்டு, பள்ளியை மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனால், பள்ளி மாணவ, மாணவிகள், உடல் முழுவதும் நனைந்தே பள்ளி கட்டடத்தை வந்தடைகின்றனர். கட்டடத்திற்குள்ளேயும் மழை நீர் தேங்கி நிற்பதால், அடிக்கடி பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர். எனவே குழந்தைகளின் கல்வியை கருத்தில்கொண்டு வாய்க்காலை தூர்வார வேண்டும் என்பது பெற்றோரின் கோரிக்கையாக உள்ளது.
Next Story