பசுமை போர்த்திய சூழலில் காட்சி தரும் பாரியூர் கொண்டத்து காளியம்மன்

வயல்வெளிகளுக்கு நடுவே ஓங்கி உயர்ந்த ராஜகோபுரத்துடன், காட்சி தருகிறது பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோயில்
பசுமை போர்த்திய சூழலில் காட்சி தரும் பாரியூர் கொண்டத்து காளியம்மன்
x
* ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே பாரியூர் பகுதியில் இருக்கிறது கொண்டத்து காளியம்மன் கோயில். நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்த கோயிலின் கண்கவர் ராஜகோபுரமே அந்த பகுதிக்கான அடையாளமாக இருக்கிறது. உள்ளே சென்றால் சர்வ அலங்காரத்தில் காட்சி தருகிறாள் கொண்டத்துக் காளி. 

* சிவப்பு நிற உடையணிந்து விரதமிருந்து  குண்டம் இறங்கி வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்ற நம்பிக்கை பக்தர்களிடம் உள்ளது... குண்டம் இறங்கும் திருவிழாவின் போது பாரியூர் பகுதியே மக்கள் வெள்ளமாக காட்சியளிக்கும் அமாவாசை, பௌர்ணமி நாட்கள், ஆடி வெள்ளி, தை வெள்ளிக் கிழமைகளில் அம்மனை வழிபட பக்தர்கள் கூட்டம் இங்கு அலைமோதுகிறது.

*  புதிதாக வீடு வாங்குபவர்கள், திருமணம் நிச்சயம் செய்பவர்கள் அம்மனிடம் வாக்கு கேட்டு விட்ட பின்னர் அதை செயல்படுத்துகிறார்கள். 

* இதேபோல் கோயில் அருகே உள்ள கிணற்றில் குளித்து முனியப்பனுக்கு அதிகாலை நேரத்தில் குடத்தில் தண்ணீர் எடுத்து வந்து 10 நாட்கள் வழிபட்டால் தடைபட்ட திருமணம் நடந்தேறும் என்கிறார்கள்.

* கோயிலின் மற்றொரு சிறப்பம்சம் 8 ஆண்டுகளாக இங்கு நடக்கும் தங்கத் தேர் இழுக்கும் நிகழ்வுதான்... தினமும் மாலை 6.30 மணிக்கு நடக்கும் இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வதுண்டு.

* இதுபோல் தன்னை நம்பி வரும் பக்தர்களுக்கு நிறைவான மகிழ்ச்சியையும், வரங்களையும் வாரி வழங்கி மக்களை காத்து வருகிறாள் இந்த கொண்டத்துக்காளி.






Next Story

மேலும் செய்திகள்