"குற்றம் செய்யாதவரை தண்டிக்க கூடாது" - நேரில் ஆஜரான தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரிக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுரை
"குற்றம் செய்யாதவரை தண்டிக்க கூடாது" - நேரில் ஆஜரான தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரிக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுரை
ஹரிராகவன் மீதான தேசிய பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அவரின் மனைவி வழக்கு தொடர்ந்தார். விசாரணைக்காக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, உயர்நீதிமன்ற கிளையில் இன்று ஆஜரானார். அப்போது குற்றம் செய்யாதவர்களை தண்டிக்கக் கூடாது என நீதிபதிகள் செல்வம், பஷீர் அகமது அறிவுறுத்தினர். ஒருவரின் சுதந்திர உரிமையை பறிக்கும் நோக்கில் காவல்துறையினர் சொல்வதை எல்லாம் ஏற்றுக்கொள்ள கூடாது எனவும் வழக்கின் தன்மையை கடைசி நிமிடம் வரை ஆராய்ந்து பார்க்க வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளை மதிக்க வேண்டும் எனவும் தூத்துக்குடி ஆட்சியருக்கு அறிவுறுத்தப்பட்டது. பின்னர், காவல்துறையின் நடவடிக்கை நீதிமன்றம் வழங்கிய ஜாமின் நீர்த்துபோகும் வகையில் இருப்பதாகக் கூறிய நீதிபதிகள், தேசிய பாதுகாப்பு சட்டத்தை ரத்து வழக்கை முடித்து வைத்தனர்.
Next Story