தமிழகத்தில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதன் எதிரொலி : தெலங்கானா, ஆந்திராவில் ஆலை துவங்குவது குறித்து ஆலோசனை
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதன் எதிரொலியாக தமிழகத்தில் தொழிற்சாலை தொடங்க திட்டமிட்டு இருந்த பிசிபிஎல் நிறுவனம், அதில் இருந்து பின்வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதன் எதிரொலியாக தமிழகத்தில் தொழிற்சாலை தொடங்க திட்டமிட்டு இருந்த PCBL எனப்படும் பிலிப்ஸ் கார்பன் பிளாக் நிறுவனம், அதில் இருந்து பின்வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. PCBL நிறுவனம், தமிழகத்தில் 600 கோடி ரூபாய் முதலீட்டில் தொழிற்சாலை ஆரம்பிக்க நிலம் வாங்கி இருந்தது. இந்த நிலையில், அந்த நிறுவனத்தின் தலைவர் சஞ்சீவ் கோயங்கா, தமிழகத்தில் தொழிற்சாலையை தொடங்குவது குறித்து மீண்டும் ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ளார். தெலங்கானா அல்லது ஆந்திராவில் தொழில் தொடங்கலாமா என்றும் யோசித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
Next Story