மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் செல்லும் சோலார் கார் : இளைஞரின் 10 ஆண்டு முயற்சிக்கு கிடைத்த பரிசு
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் 10 ஆண்டு முயற்சிக்கு பிறகு சோலார் கார் ஒன்றை வெற்றிகரமாக வடிவமைத்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் பூவரசன்குப்பம் நரசிங்கபுரத்தை சேர்ந்தவர் ராஜசேகரன். மருந்தியல் படிப்பு முடித்து, இவர், திட்டக்குடியில் தனியார் மருத்துவமனையில் லேப் டெக்னீசியனாக பணிபுரியும் இவர், சூரிய ஒளியில் இயங்கும் சோலார் கார் ஒன்றை வடிவமைத்துள்ளார். சூரிய ஒளியில் கிடைக்கும் மின்சாரத்தை பேட்டரியில் சேமிக்க டிஜிட்டல் இன்வெர்ட்டர் பொருத்தப்பட்டுள்ளது. இந்த காரில் மணிக்கு சுமார் 50 கிலோ மீட்டர் வேகத்தில், நாள்தோறும் 300 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லலாம். இதன் மூலம் இரவு நேரத்திலும் தடையற்ற பயணத்தை மேற்கொள்ள முடியும். மேலும், காரில் உள்ள பேட்டரியில் சேமிக்கப்பட்ட மின்சாரத்தை கொண்டு வீட்டில் மின்சாரம் இல்லாத சமயங்களில் மிக்சி, கிரைண்டர் உள்ளிட்டவைகளை இயக்கலாம். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ராஜசேகரன், இந்த காரை உருவாக்க ஒரு லட்சம் ரூபாய் செலவானதாகவும், இதை நாள்தோறும் 750 கிலோ மீட்டர் தூரம் செல்லும் வகையில் வடிவமைக்க உள்ளதாக தெரிவித்தார்.
Next Story