சென்னை - சேலம் பசுமை சாலை திட்டத்தை எதிர்த்து வழக்கு

சென்னை - சேலம் பசுமை சாலை திட்டத்துக்கு எதிராக பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி மனு தாக்கல் செய்துள்ளார்.
சென்னை - சேலம்  பசுமை சாலை திட்டத்தை எதிர்த்து வழக்கு
x
பசுமை வழி சாலை திட்டத்திற்காக காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் 2 ஆயிரத்து 791 ​ஹெக்டர் நிலங்களை கையகப்படுத்த தடை விதிக்க வேண்டும் எனவும், திட்டத்தை செயல்படுத்தினால் ஜருகு, சேவராயன், சின்ன கல்வராயன் உள்ளிட்ட 8 மலைகளும், வன விலங்குகளும் பாதிக்கப்படும் எனவும் அன்புமணி தெரிவித்துள்ளார். மேலும், திண்டிவனம், தர்மபுரி வழியாக சேலம் செல்லும் நெடுஞ்சாலைகளை  விரிவுபடுத்தினால் 10 ஆயிரம் கோடி ரூபாய் சேமிப்பதுடன் ஒரு லட்சம் மரங்கள் வெட்டப்படுவதை தடுக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். 

மேலும் மாற்று பாதையில் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்யுமாறும் அன்புமணி கோரியுள்ளார். இந்த மனு, விரைவில் விசாரணைக்கு வரும் என தெரிகிறது. 

Next Story

மேலும் செய்திகள்