இயல், இசை, நாடகத்தில் கொடி கட்டிப் பறந்தவர் - பி.யு.சின்னப்பா

இயல், இசை, நாடகம் என முத்திரை பதித்த பி.யு.சின்னப்பாவிற்கு, மணிமண்டபம் அமைக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இயல், இசை, நாடகத்தில் கொடி கட்டிப் பறந்தவர் - பி.யு.சின்னப்பா
x
திரைப் படத் துறையில், தொழில் நுட்ப வளர்ச்சி இல்லாத, 1940ம் ஆண்டு காலகட்டத்தில், 2 வேடங்களில் நடித்துப் பிரபலமானவர். புதுக்கோட்டை உலகநாதபிள்ளை சின்னப்பா என்றழைக்கப்பட்ட பி.யு.சின்னப்பா, தமிழ்த் திரைப்பட உலகில் நடிகர், பாடகர், தயாரிப்பாளர் என்று பல துறைகளிலும் புகழ்பெற்று விளங்கியவர்.

உலக நாடுகள் பலவற்றிலும் நாடகங்களை நடத்தியவர். தமது 19வது வயதில் நாடகக் கம்பனியில் இருந்து விலகி, இசைக்கச்சேரிகள் செய்து வந்தார்.பின்னர்,''சந்திரகாந்தா'' மூலம், திரைப்படத்துறையில் புகுந்தார் சின்னப்பா. மாடர்ன் தியேட்டர்ஸ் டி. ஆர். சுந்தரம், சின்னப்பாவை 1940ம் ஆண்டு, ''உத்தம புத்திரன்'' படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்க வைத்தார். 

தமிழில் முதன் முதலில் இரட்டை வேடத்தில் நடித்த பெருமைக்குரியவர் இவரே.புதுக்கோட்டையில், பி.யு.சின்னப்பா சொத்துக்களை வாங்கி குவித்தார். ''இனி, சொத்து வாங்க கூடாது'' என, புதுக்கோட்டை சமஸ்தான மன்னர்கள், உத்தரவிடும் அளவிற்கு, அவரது சொத்துக்கள் இருந்தன. புகழின் உச்சியில் இருந்த போது, 1951ம் ஆண்டு மறைந்தார். அவரது பெயரில் இருக்கும்,  சின்னப்பா நகரில், அவருக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்