நீட் உள்ளிட்ட இதர நுழைவுத் தேர்வுகளை மறு பரிசீலனை செய்ய வேண்டும் - தம்பிதுரை
நீட் உள்ளிட்ட இதர நுழைவுத் தேர்வுகளை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை வலியுறுத்தியுள்ளார்.
மக்களவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய தம்பிதுரை, நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளை நடத்த மத்திய அரசு தேசிய தேர்வு அமைப்பு ஒன்றை நிறுவி உள்ளதாகவும், இதனை தமிழக அரசு எதிர்ப்பதாகவும் தெரிவித்தார். இதனால் மாணவர்கள் நுழைவுத் தேர்வில் கவனம் செலுத்துவார்களே தவிர தங்கள் பாடத்தில் கவனம் செலுத்த மாட்டார்கள் என்றும், ஏழை மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்றும் தம்பிதுரை குறிப்பிட்டார். முன்னர் மாநில அரசின் பட்டியலில் மட்டுமே இருந்த கல்வி, பிறகு பொதுப் பட்டியலில் கொண்டு வரப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார். எனவே மாநில அரசின் உரிமைகளில் மத்திய அரசு தலையிடக் கூடாது என்றும், நீட் மற்றும் இதர நுழைவுத் தேர்வுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் தம்பிதுரை தெரிவித்தார்.
Next Story