கோவில்களில் புராதன சின்னங்கள் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய வேண்டும் - உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு
அறநிலைய துறைக்கு உட்பட்ட கோவில்களில் புராதன சின்னங்கள் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு.
அனைத்து கோயில்களிலும் அடிப்படை வசதிகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க மாவட்ட நீதிபதிகளுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கோயில்களில் பக்தர்களுக்கு பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளை செய்து தர உத்தரவிடக் கோரி, ராஜபாளையத்தை சேர்ந்த கல்யாண சுந்தரம் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிபதிகள் முரளிதரன், கிருஷ்ணவள்ளி ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்து அறநிலையத் துறையின் கீழ் உள்ள அனைத்து கோயில்களிலும் பக்தர்களுக்கு பாதுகாப்பான தரிசனம், அடிப்படை வசதிகள் மற்றும் அங்குள்ள புராதன, பழமையான பொருட்களின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்யுமாறு அனைத்து மாவட்ட நீதிபதிகளுக்கும் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான அறிக்கையை வரும் செப்டம்பர் 30ந் தேதிக்குள் அளிக்குமாறு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை அக்டோபர் 1 ந் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
Next Story