வட இந்தியாவிலும் ஆடி மாதம் கொண்டாட்டம் - சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
'சாவன்' என்றழைக்கப்படும் ஆடி மாதம் வட இந்தியர்களுக்கு மிக முக்கியமான மாதம்.
"சாவன்' என்றழைக்கப்படும் ஆடி மாதம் வட இந்தியர்களுக்கு மிக முக்கியமான மாதம். கங்கையிலிருந்து புனித நீரெடுத்து நடந்தே வந்து சிவனுக்கு அபிஷேகம் செய்வது வழக்கம். இதையடுத்து சவான் புனித மாதம் தொடங்கிய முதல் திங்கட்கிழமையான இன்று பக்தர்கள் சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர்.
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள ஆனந்தேஸ்வர் கோயில் டெல்லியில் உள்ள கவுரிசங்கர் கோயில் வாரணாசியில் உள்ள காசிவிஸ்வநாதர் உள்ளிட்ட சிவன் கோயில்களில் பக்தர்கள் அதிகாலை முதலே வரிசையில் நின்று வழிபாடு நடத்தி வருகின்றனர்.
Next Story