பிளாஸ்டிக்கை தவிர்க்கும் இறைச்சி வியாபாரி : பேப்பர், வாழை இலையில் கட்டப்படும் பொட்டலம்
குடியாத்தம் பகுதியில் பிளாஸ்டிக் கவர்களை தவிர்த்து, மாற்றுவழியில் பொட்டலம் கட்டி தரும் இறைச்சி வியாபாரிக்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.
2019 ஜனவரி 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, வியாபாரிகள் பொட்டலம் கட்டவும், பொருட்களை எடுத்து செல்லவும் மாற்றுவழியை பழக்கப்படுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, குடியாத்தத்தில் உள்ள இறைச்சி கடை ஒன்றில், பேப்பர், வாழைஇலை வைத்து பொட்டலம் கட்டும் வியாபாரி கோபி, அதை துணிப்பையில் வைத்து நுகர்வோர்களிடம் வழங்குகிறார். வியாபாரியின் இந்த முயற்சிக்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். கூடுதல் செலவு ஏற்பட்டாலும், சுற்றுச்சூழலை பாதுகாக்க தம்மால் முடிந்த உதவியை செய்வதில் மன நிறைவாக இருப்பதாக அந்த வியாபாரி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
Next Story