மாற்றுத் திறனாளிகளுக்கான நலத் திட்டங்கள் : தமிழக அரசுக்கு ஆளுநர் பாராட்டு

மாற்றுத் திறனாளிகளுக்காக தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றி வருவதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பாராட்டியுள்ளார்.
மாற்றுத் திறனாளிகளுக்கான நலத் திட்டங்கள் : தமிழக அரசுக்கு ஆளுநர் பாராட்டு
x
சென்னையில்,மாற்று திறனாளி அமைப்பின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்றார். அப்போது, தனது கண்களை  தானம் வழங்கும் படிவத்தில் கையெழுத்திட்டார். விழாவில் பேசிய ஆளுநர் பன்வாரிலால், மாற்று திறனாளிகள் பயனடையும் வகையில் அடையாள அட்டையை மத்திய அரசு வழங்கியுள்ளதாக தெரிவித்தார். மேலும் மாரியப்பன்,காயத்ரி சங்கரன், அனுராதா, ராதாபாய் உள்ளிட்டோர் சாதனை படைத்துள்ளதாகவும் மாற்று திறனாளிகளுக்காக பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருவதாகவும் கூறினார். அரசு வேலை வாய்ப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான 4 சதவீத இட ஒதுக்கீட்டை தான் கண்காணித்து வருவதாகவும் ஆளுநர் குறிப்பிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்