கிருஷ்ணகிரியில் புதிய லித்தியம் அயன் பேட்டரி தொழிற்சாலை

கிருஷ்ணகிரியில் 1000 கோடி ரூபாய் முதலீட்டில், லித்தியம் அயன் பேட்டரி தொழிற்சாலை துவங்கப்பட இருக்கிறது..
கிருஷ்ணகிரியில் புதிய லித்தியம் அயன் பேட்டரி தொழிற்சாலை
x
செல்போன்கள், மடிக்கணினிகள், டிஜிட்டல் காமிராக்கள், எலக்ட்ரிக் கார்கள் மற்றும் பல் வகை எல்க்ட்ரானிக் கருவிகளில், லித்தியம்-அயன் வகை பேட்டரி பயன்படுத்தப்படுகிறது. மீண்டும் மீண்டும் ரீ-சார்ஜ் செய்து பயன்படுத்தப்படும் இந்த லித்தியம் அயன் பேட்டரியின் தேவை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால், இந்தியாவில் இதுவரை இது உற்பத்தி செய்யப்படவில்லை. லித்தியம் அய்ன் செல்கள் இறக்குமதி செய்யப்பட்டு, இங்கு பேட்டரிகளாக assemble செய்யப்படுகிறன.

சென்னை தரமணியில் உள்ள மத்திய அரசு நிறுவனமான CSIR-CECRIயில், முதன் முறையாக, லித்தியம்-அயன் செல் தயாரிக்க ஒரு சிறு தொழிற்சாலை சமீபத்தில் நிறுவப்பட்டது. இதை தொடர்ந்து கிருஷ்ணகிரியில் 1000 கோடி ரூபாய் முதலீட்டில்,ஒரு கிகா வாட் உற்பத்தி திறன் கொண்ட லித்தியம் அயன் பேட்டரி தொழிற்சாலையை, ராசி குழுமம் துவக்க திட்டமிட்டுள்ளது. இந்தியாவிலேயே மிகப் பெரிய லித்தியம் அயன் பேட்டரி தயாரிப்பு தொழிற்சாலையாக இது இருக்கும் என்று இதன் நிர்வாக இயக்குனர் நரசிம்மன் தெரிவித்தார்.அரசு நிறுவனங்களான CSIR மற்றும் CECRI உடன் இணைந்து.அரசு - தனியார் கூட்டு முயற்சி திட்டத்தில் இத்தொழிற்சாலை உருவாக்கப்பட உள்ளது. இரண்டு கட்டமாக இந்நிறுவனம் விரிவுபடுத்தப்படும்.2030ஆம் ஆண்டில், இந்தியாவில் எலக்ட்ரிக் கார்கள் மட்டுமே இயக்கபட வேண்டும் என்று மத்திய அரசு இலக்கு நிர்ணியத்துள்ள நிலையில், லித்தியம் அயன் பேட்டரிகளுக்கு பெரும் தேவை உருவாகும் என்று கணிக்கப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்