ஓய்வு பெற்ற ஆசிரியரிடம் ரூ.8000 லஞ்சம் வாங்கிய மாவட்ட கருவூல கண்காணிப்பாளர்
ஒய்வு பெற்ற ஆசிரியர் செல்வராஜ் என்பவரிடம் 8 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக மாவட்ட கருவூல கண்காணிப்பாளர் சந்திரனை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல்லில் ஒய்வு பெற்ற ஆசிரியர் செல்வராஜ் என்பவரிடம் 8 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக மாவட்ட கருவூல கண்காணிப்பாளர் சந்திரனை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர். செல்வராஜூக்கு சேரவேண்டிய பணிக்கொடை தொகை 10 லட்சம் ரூபாய் வழங்குவதற்காக சந்திரனை அணுகிய போது அவர் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து செல்வராஜ் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்ததன் பேரில் சந்திரன் லஞ்ச பணத்தை வாங்கும் போது கைது செய்யப்பட்டார்.
ரூ.4000 லஞ்சம் வாங்கியதாக புகார் : வருவாய் உதவியாளர் கணேசன் கைது
ராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தில் வருவாய் உதவியாளராக பணியாற்றும் கணேசன் என்பவர், 4 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டார். அவர் சுகந்தகுமார் என்பவரிடம் நிலவரியாக 8 ஆயிரம் ரூபாயும் லஞ்சமாக 4 ஆயிரம் ரூபாயும் கேட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து சுகந்தகுமார் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். அதன்பேரில் நகராட்சி அலுவலகத்தில் சோதனை நடத்திய போலீசார், கணேசனை கைது செய்து அவரிடமிருந்து 12 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.
இறப்பு சான்றிதழ் வழங்க ரூ.1000 லஞ்சம் வாங்கியதாக புகார் : பிறப்பு,இறப்பு பதிவு அலுவலர் சுப்பிரமணியம் கைது
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே இறப்பு சான்றிதழ் வழங்க ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக கல்லுக்கூட்டம் பிறப்பு இறப்பு பதிவு அலுவலர் சுப்பிரமணியம் கைது செய்யப்பட்டார். சைமன் என்பவர் அளித்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ரசாயணம் தடவிய இரண்டு 500 ரூபாய் நோட்டுகளை அவரிடம் கொடுத்துள்ளனர். அதனை சைமனிடமிருந்து வாங்கிய போது சுப்பிரமணியத்தை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.
Next Story