விசாரணை ஆணையத்தின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர்
விசாரணை ஆணையத்தின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது
*புதிய தலைமை செயலகம் கட்டப்பட்டத்தில் முறைகேடு நடைபெற்றதாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையம் திமுக தலைவர் கருணாநிதிக்கு சம்மன் அனுப்பியது.
*இது தொடர்பான வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
*அப்போது கருணாநிதி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நீதிமன்றம் தடை விதித்தும் ஆணையம் தொடர்ந்து இயங்கி வருவதாக தெரிவித்தார்.
*இதுவரை எத்தனை விசாரணை ஆணையங்கள் அமைக்கப்பட்டுள்ளன, அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையங்கள் என்ன செய்கின்றன,
*எந்த அடிப்படையில் ஆணையம் அமைக்கப்படுகிறது என நீதிபதி சுப்பிரமணியம் சரமாரியாக கேள்வி எழுப்பினார்.
*ஆணையம் அமைத்து அரசு என்ன சாதனை செய்துள்ளது என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினர்.
விசாரணை ஆணைய அறிக்கையால் எந்த பயனும் இல்லை என தெரிவித்த நீதிபதி, விசாரணை ஆணையம் மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டதாகவும் கூறினார்.
*ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான ஆதாரம் இருந்தால் வழக்கு பதிவு செய்யாமல் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது ஏன் என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
*விசாரணை ஆணையம் அமைப்பது தொடர்பாக விதிகள் வகுக்க வேண்டும் என தெரிவித்த நீதிபதி, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.
Next Story