குழந்தை வரம் வேண்டுவோருக்கு வரம் அளிக்கும் கருக்காத்தம்மன்
ஆடிவெள்ளிக் கிழமைகளில் அலைமோதும் பெண்கள் கூட்டம்.
சென்னையிலிருந்து புதுச்சேரி செல்லும் வழியில் மாமல்லபுரத்தின் ஊரின் எல்லையில் காவல் தெய்வமாக காட்சி தருகிறாள் பிடாரி கருக்காத்தம்மன். அசுர குணம் கொண்ட மகிஷாசுரனை அழித்த அம்பாள் இங்கு வந்து அவனை வதம் செய்ததாகவும், பாறையின் மீது அமர்ந்து அருள்பாலித்ததாகவும் கூறப்படுகிறது. முன்னோர்களின் சாபத்தால் குழந்தை பாக்கியம் இல்லாமல் தவித்த ஒரு பெண்ணின் கண்ணீருக்கு மனம் இறங்கிய அம்பாள், தாயன்புடன் கருணை காட்டியதால் அந்த பக்தைக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. பெண்களின் கருவைக் காத்த அம்மன் என்பதால் தான் கருக்காத்தம்மன் என அழைக்கப்படுவதாக கோயில் வரலாறு தெரிவிக்கிறது.
Next Story