கால்நடை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு தொடக்கம்
12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் கால்நடை மருத்துவ படிப்பில் 306 மற்றும் பி.டெக். படிப்புகளில் 60 இடங்களுக்கான கலந்தாய்வு தொடக்கம்.
கால்நடை மருத்துவ படிப்பில் 306 இடங்களும், பி.டெக். படிப்புகளில் 60 இடங்களும் உள்ளன.
12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு சென்னை வேப்பேரியில் கால்நடை மருத்துவக் கல்லூரியில் இன்று துவங்கியது.தர வரிசை பட்டியலில் முதல் 14 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு, சேர்க்கை ஆணைகளை கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் வழங்கினார்.
முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்கள் சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவ கல்லூரியை தேர்வு செய்தனர்.
நீட் தேர்வு அடிப்படையில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். சேர்க்கை நடப்பதால், 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் நடக்கும் கால்நடை மருத்துவ படிப்பிற்கு மாணவர்களிடையே கடும் போட்டி எழுந்துள்ளது.
Next Story