ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 66,000 கனஅடி நீர் வரத்து - 17வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 66,000 கனஅடி நீர் வரத்து - 17 வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 66,000 கனஅடி நீர் வரத்து - 17வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
x
* கர்நாடக அணைகளில் இருந்து தொடர்ந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் இன்று காலை நிலவரப்படி, ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியில் வினாடிக்கு 66 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டு இருக்கிறது. 

* இதை தொடர்ந்து, சுற்றுலா பயணிகள் நீர் வீழ்ச்சியில் குளிக்க விதிக்கப்பட்ட தடை 17-வது நாளாக நீடிக்கிறது. நீர்வரத்து அதிகரிப்பை தொடர்ந்து வருவாய்த்துறை அதிகாரிகள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

சின்னசுருளி அருவியில் குவிந்து வரும் சுற்றுலா பயணிகள்

* மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கன மழை காரணமாக சின்னசுருளி அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

* இதனால் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை தருகின்றனர். இந்நிலையில், தொடர்ந்து மழை பெய்வதால் அணையின் நீர் வரத்து மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

* இந்த அருவியில் இருந்து கூட்டுகுடிநீர் திட்டத்தின் மூலமாக 25 க்கும் மேற்பட்ட கிராமங்களின் குடிநீர் தட்டுபாடு நீக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்